அன்னிய செலாவணி மோசடி வழக்கு: எழும்பூர் கோர்ட்டில் பாஸ்கரன் ஆஜர்

அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக எழும்பூர் கோர்ட்டில் சசிகலா அவரது உறவினர் பாஸ்கரன் இன்று ஆஜர் ஆனார்.
அன்னிய செலாவணி மோசடி வழக்கு: எழும்பூர் கோர்ட்டில் பாஸ்கரன் ஆஜர்
Published on

சென்னை:

ஜெ.ஜெ டி.வி.க்கு (தற்போது ஜெயா டி.வி) வெளிநாட்டில் இருந்து ஒளிபரப்பு உபகரணங்கள் வாங்கியது தொடர்பான அன்னிய செலாவணி மோசடி வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சசிகலா அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கு விசாணையை அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கு விசாரணை பெரியமேடு அல்லிகுளம் வளாகத்தில் உள்ள எழும்பூர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக பாஸ்கரன் இன்று எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை பாஸ்கரன் மறுத்தார்.

இதனை தொடர்ந்து சசிகலா, பாஸ்கரன் மீதான வழக்கு விசாரனையை எழும்பூர் கோர்ட்டு தள்ளி வைத்தது.

இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 20-ந் தேதி எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்ற போது சசிகலா முதுகுவலியால் அவதிப்படுவதாகவும் எனவே காணொலிகாட்சி மூலம் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் அதனை அன்று கோர்ட்டு ஏற்றுக் கொள்ளாமல் அது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

சசிகலா சிறையில் இருப்பதால் இன்றும் ஆஜராகவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com