

புதுடெல்லி:
நாடு முழுவதும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்களில் ஒரு நாளைக்கு 30 கோடி மக்கள் வருகை தருவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவு அல்லது பிரசாதங்கள் தயாரித்து சுகாதாரமான முறையில் விநியோகம் செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
உணவு பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் வழிபாட்டு தல அதிகாரிகளுக்கு பயிற்சி நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிப்பது குறித்த பயிற்சியில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் சோம்நாத் கோவிலில் இருந்து அதிகாரிகள் முதற்கட்டமாக கலந்து கொண்டுள்ளனர்.