ஜார்கண்ட் ஐகோர்ட்டில் லாலு பிரசாத் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடிவு

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத்தை ஜாமீனில் எடுக்க முடிவு செய்துள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். #FodderScam #LaluPrasadYadav
ஜார்கண்ட் ஐகோர்ட்டில் லாலு பிரசாத் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடிவு
Published on

ராஞ்சி:

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத், தியோகாரில் உள்ள அரசு கருவூலத்தில் கால்நடை தீவனம் வாங்கியதாக ரூ.89 லட்சத்து 27 ஆயிரம் எடுத்து ஊழல் புரிந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ., தனிக்கோர்ட்டு கடந்த 6-ந் தேதி அவருக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் லாலு பிரசாத்தின் வக்கீல்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

லாலு பிரசாத்தை ஜாமீனில் எடுக்க முடிவு செய்துள்ளோம். எனவே அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை விவரத்தை உன்னிப்பாக படித்து வருகிறோம். வருகிற 12 அல்லது 15-ந் தேதியில் ஜார்கண்ட் ஐகோர்ட்டில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்வோம்.

லாலு பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் அதிர்ச்சியில் அவருடைய சகோதரி இறந்து விட்டார். இதனால் அவருக்கு பரோல் கேட்டு மனு தாக்கல் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.   #FodderScam #LaluPrasadYadav #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com