கால்நடை தீவன 4-வது வழக்கு: லாலு பிரசாத் குற்றவாளி என அறிவிப்பு

கால்நடை தீவன 4 ஆவது ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #LaluPrasadYadav
கால்நடை தீவன 4-வது வழக்கு: லாலு பிரசாத் குற்றவாளி என அறிவிப்பு
Published on

ராஞ்சி:

ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ்.

பீகார் முதல்-மந்திரியாக இருந்த இவர் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலுபிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது.

இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 15 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் மீதான தும்சா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி ஊழல் புரிந்தது தொடர்பான 4-வது வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் 13 பேர் குற்றவாளிகள் என்றும் அறிவித்தார்.

இவர்களுக்கு தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

முன்னாள் முதல்-மந்திரி ஜெகந்நாத் மிஸ்ரா உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com