

வேலாயுதம்பாளையம்:
கருர் மாவட்டம் நொய்யல் சேமங்கி, கவுண்டன் புதூர், நடையனுர், வேலாயுதம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டு மல்லி, முல்லைப்பூ, செவ்வந்நி, அரளி, சம்பங்கி, பட்டு ரோஜா, துளசி, உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டுள்ளனர். பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர். பல விவசாயிகள் பறித்த பூக்களை லேசான சாக்குகளில் போட்டு தினசரி பூ விற்பனை மண்டிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்திருப்பதால் நேற்று பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. குண்டு மல்லி பூ ஒரு கிலோரூ. 1250 க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.1200, சம்பங்கி கிலோ ரூ. 300, அரளி கிலோ ரூ. 250, பட்டு ரோஸ் ரூ. 300, பெரிய ரோஸ் ரூ. 200, துளசி ஒரு கட்டு ரூ.20, விற்பனை ஆனது. இதனால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.