

திண்டுக்கல்:
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் விளைச்சல் செய்யப்பட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
நாளை விநாயகர் சதுர்த்தி என்பதாலும், தொடர் முகூர்த்தங்கள் இருப்பதாலும் பூக்களின் விலை இருமடங்காகியுள்ளது.
குறிப்பாக 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூவின் விலை 800 ஆகவும், 150-க்கு விற்கப்பட்ட முல்லை விலை 450 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேபோல் சம்பங்கி, அரளி, ரோஜா, கனகாம்பரம், செண்டு மல்லி, கோழிக்கொண்டை என அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பூ வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.