மகாராஷ்டிர மாநிலத்தில் கார் மீது டிராக்டர் மோதல் - 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் சங்லி மாவட்டத்தில் சொகுசு கார் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கார் மீது டிராக்டர் மோதல் - 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் பலி
Published on

மகாராஷ்டிர மாநிலம் சங்லி மாவட்டத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்த் கிராமத்தில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு விட்டு, வீரர்கள் குண்டால் பகுதிக்கு காரில் திரும்பி கொண்டிருந்தபோது கடேகான்-சங்லி சாலையில் இந்த விபத்து  ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் நொறுங்கியது. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள டிராக்டர் டிரைவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com