

காசியாபாத்:
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருந்து பல்லப்கர் பகுதிக்கு சரக்கு ரெயில் சென்றுகொண்டிருந்தது. இன்று காலை 10.10 மணியளவில் மதுராவில் சென்றபோது ரெயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரெயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்ட இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தடம்புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.