புனே பெங்களூரு நெடுஞ்சாலையில் கோர விபத்து- 5 மாணவர்கள் உயிரிழப்பு

புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் இன்று நடந்த கோர விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
புனே பெங்களூரு நெடுஞ்சாலையில் கோர விபத்து- 5 மாணவர்கள் உயிரிழப்பு
Published on

நகான் பட்டா:

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று மாணவர்கள் சிலர் டிரக்கில் பயணம் செய்தனர். அவர்கள் சென்ற டிரக் புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நகான் பட்டா என்ற இடத்தில் சென்றபோது ஒரு வாகனம் திடீரென மோதியது. அப்போது டிரக் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதனால் டிரக்கினுள் இருந்த மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயமடைந்தனர். இதில், 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து காரணமாக புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com