அலட்சியத்தால் நடந்த விபரீதம்: தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது ரெயில் மோதியதில் 5 பேர் பலி

அலட்சியத்தால் நடந்த விபரீதம்: தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது ரெயில் மோதியதில் 5 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் சாவாய் மதோபூர் ரெயில்நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது ரெயில் மோதியதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on


ஜெய்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தின் சாவாய் மதோபூர் ரெயில்நிலையத்தில் இன்று ஒரு ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளில் சிலர் நடைமேடையை பயன்படுத்தாமல், தண்டவாளம் வழியாக இறங்கிச் சென்றுள்ளனர். அப்போது, அந்த தண்டவாளம் வழியாக சென்ற காந்திதாம் - ஹைரா அதிவிரைவு வண்டி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில், ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் நான்கு பேர் கமல்(19), நிதிஷ்(14), மான் சிங்(35), முகேஷ்(35) என அடையாளம் காணபட்டுள்ளனர்.

நடைமேடையை பயன்படுத்தாமல் மிக அலட்சியமாக தண்டவாளத்தை கடக்க முயற்சித்ததால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக ரெயில் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com