கர்நாடகாவில் சாலை விபத்து- தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் லாரியும் ஆட்டோவும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். #KarnatakaAccident
கர்நாடகாவில் சாலை விபத்து- தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Published on

மாண்டியா:

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சங்கனஹள்ளி என்ற இடத்தில் நேற்று இரவில் ஆட்டோவில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பாதையில் வந்த ஒரு லாரி ஆட்டோ மீது திடீரென மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ கடுமையாக சேதம் அடைந்தது.  ஆட்டோவில் பயணித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் துடிதுடித்தனர்.

இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு நாகமனகளா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த லாரி நெடுஞ்சாலைப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமானது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் உயிரிழந்த ஆட்டோ டிரைவர் சதீஷ், யரசம்மா, போரலிண்டா, சுரேஷ் மற்றும் தலுர்சாயித் ஆகியோர் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. #KarnatakaAccident

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com