அருணாசலில் சுவர் இடிந்து விபத்து - 5 தொழிலாளர்கள் பரிதாப பலி

அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். #Arunachalpradesh #WallCollapse
அருணாசலில் சுவர் இடிந்து விபத்து - 5 தொழிலாளர்கள் பரிதாப பலி
Published on

இடாநகர்:

அருணாசலப்பிரதேசம் மாநிலம் பாபும்பரே மாவட்டத்தில் உள்ள டோனில் காலனி பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அங்கு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை அங்கு கட்டுமான வேலையில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில், அவர்கள் அனைவரும் அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இறந்தவர்கள் உடல்களை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Arunachalpradesh #WallCollapse

X

Maalai Malar
www.maalaimalar.com