உ.பி: கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து - குழந்தை உட்பட 5 பேர் பலி

உத்தரபிரேதசம் மாநிலம் லெகிம்பூர் கேரி மாவட்டத்தில் சொகுசு கார் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி: கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து - குழந்தை உட்பட 5 பேர் பலி
Published on

லக்னோ:

உத்தரபிரேதசம் மாநிலம் லெகிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள முகம்மதி-ஷாஜாகன்பூர் சாலையில் நேற்று இரவு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு ஷன்கர்பூர் பகுதிக்கு அருகில் லாரி ஒன்று சொகுசு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த

பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தது. மேலும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லாரி டிரைவர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தலைமறைவாகினார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் முகம்மாதியில் உள்ள நகரா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் (30) , விபின் (22), விபினின் தாயார் விஜய் குமாரி (45), மற்றும் மோனு (40) என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த மற்றவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com