சித்தூர் அருகே சிறுமியை 3 மாதங்களாக மிரட்டி கற்பழித்த சிறுவர்கள் 5 பேர் கைது

சித்தூர் அருகே 12 வயது சிறுமியை 3 மாதங்களாக மிரட்டி கற்பழித்த சிறுவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் அருகே சிறுமியை 3 மாதங்களாக மிரட்டி கற்பழித்த சிறுவர்கள் 5 பேர் கைது
Published on

சித்தூர்:

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த புங்கனுர் பகத்சிங் நகரை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் அந்த சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பின்னர் இது குறித்து தனது நண்பர்களிடத்தில் கூறி அவர்களையும் அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக அந்த சிறுமியை 5 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று சிறுமியை மிரட்டியுள்ளனர். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 5 பேரையும் தேடி சென்றனர். புங்கலூர் பஸ் நிலையம் அருகே இருந்த 2 சிறுவர்களை பிடித்து அடித்து உதைத்தனர்.

டி.எஸ்.பி. சவுடேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 சிறுவர்களையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அவர்கள் கூறியதின் பேரின் மேலும் 3 சிறுவர்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com