தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - உரிமையாளர் உள்பட 5 பேர் கைது

திருமுல்லைவாயலில் உள்ள தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அதன் உரிமையாளர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - உரிமையாளர் உள்பட 5 பேர் கைது
Published on

ஆவடி:

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், 7-வது தெருவில் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சுமார் 29 சிறுவர், சிறுமிகள் பல இடங்களில் இருந்து இங்குவந்து தங்கியிருந்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாலை திருமுல்லைவாயல் எட்டியம்மன் நகரில் உள்ள அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் கலந்துகொண்ட அம்பத்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுகளிடம் காப்பகத்தில் தங்கியிருந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் தங்களுக்கு காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறினர்.

இதையடுத்து மாஜிஸ்திரேட்டுகள் இதுகுறித்து விசாரிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் திருமுல்லைவாயல் போலீசாருக்கு உத்தரவிட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் நேற்று இரவு அந்த காப்பகத்துக்கு சென்று அதிரடி விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் காப்பக ஊழியர்கள் பாஸ்கர், முத்து, உரிமையாளர் விமலா ஜேக்கப் உள்பட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் காப்பகத்தில் இருந்த சிறுவர், சிறுமிகள் அனைவரையும் ஆவடியை அடுத்த பொத்தூர் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்துக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com