மீனவர் கொலை வழக்கு: தலைமறைவான வாலிபர் கைது

மீனவர் கொலை வழக்கில் தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் சின்னஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் மீனவர் குமார் (வயது45). இவர் கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் அருகே ஏந்தல் பகுதியில் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 12-வது குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ராமநாதபுரம் அருகே உள்ள பெருங்குளம் மேற்குத்தெரு கனகராஜ் மகன் விஜய் (30) என்பவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் விஜய்யை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com