தேங்காய்திட்டில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை

தேங்காய்திட்டில் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேங்காய்திட்டில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை தேங்காய்திட்டு புதுநகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). மீனவர். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகனுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் நடந்த நிலையில் வளர்மதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார்.

மனைவி இறந்த சோகத்தில் இருந்து வந்த செல்வம் 2 மகள்களுக்கு எப்படி திருமணம் செய்து கொடுக்க போகிறோம்? என வேதனையில் இருந்து வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை செல்வத்தின் உறவினர் விஜயன் அங்குள்ள கோவில் பின்புறம் உள்ள தோப்புக்கு சென்ற போது அங்குள்ள ஒரு மரத்தில் செல்வம் கைலியால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com