மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதியது- மீனவர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதிய விபத்தில் மீனவர் பலியானார்.
விபத்து
விபத்து
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது சிலையப்பன் வலசை. இந்த ஊரைச்சேர்ந்தவர் முனியசாமி (வயது 40). மீனவரான இவர் அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர் கணேசன் மகன் ராமநாதன் (30) என்பவருடன் கோரைக்கூட்டம் பகுதியில் வலைவிரித்து மீன்பிடித்து வந்துள்ளார். நள்ளிரவில் சென்று மீன்வலையை விரித்து வைத்துஅதிகாலையில் மீன்பிடித்து கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இதற்காக 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

பிச்சாவலசை பஸ்நிறுத்தம் அருகில் சென்றபோது நிலைதடுமாறி அருகில் இருந்த பாலத்தில் மோதி தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே முனியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ராமநாதனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து ராமநாதன் அளித்த புகாரின்பேரில் திருப்புல்லாணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com