குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு - முதல்கட்ட பிரச்சாரம் இன்று ஓய்வு

குஜராத்தின் 89 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் நடைபெரும் இடங்களில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
Published on

குஜராத்தில் 9-ம் தேதி நடைபெற உள்ள முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. தேர்தல் சூடு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் பிரதமர் மோடியின் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத்தில் வரும் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. 22 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க.விடம் இருந்து இம்முறை ஆட்சியை கைப்பற்றி விடும் வேகத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குஜராத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரசுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுல் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com