மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி: திருச்சி மாவட்ட வீரருக்கு முதல் பரிசு

மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வீரர் முதல் பரிசை வென்றதன் மூலம் அகில இந்திய போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.
மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி: திருச்சி மாவட்ட வீரருக்கு முதல் பரிசு
Published on

திருச்சி:

தமிழ்நாடு மாநில அளவிலான இளையோர் வலு தூக்கும் போட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்தது.

இதில் திருச்சி மாவட்டம் சார்பில் லோகு பிட்னஸ் வீரர் என்.மெஹபூப் கான் கலந்து கொண்டு மொத்தம் 727.5 கிலோ எடை தூக்கி முதல் பரிசை வென்றார். இதன் மூலம் அவர் அகில இந்திய போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் கடுமையான உழைப்பின் மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் பெற்று திருச்சிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றி பெற்று சாதனை படைத்த வீரரை திருச்சி மாவட்ட வலு தூக்கும் சங்க நிர்வாகிகள் பூபதி, ராஜேந்திர குமார், டைகர் அண்ணாமலை, லோகநாதன், கோல்டன் தமிழரசன், அருள்தாஸ், சந்திரசேகர், விசுராஜன், பாபு, பாலாஜி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com