மானசரோவர் யாத்திரை - 57 பக்தர்கள் கொண்ட முதல் குழு புறப்பட்டு சென்றது

மானசரோவர் யாத்திரையின் முதல் குழுவில் இடம்பெற்றுள்ள 57 பக்தர்கள் இன்று காலை லிப்புலேக் கணவாய் வழியாக புறப்பட்டுச் சென்றனர். #Mansoravar #Mansoravarpilgrims
மானசரோவர் யாத்திரை - 57 பக்தர்கள் கொண்ட முதல் குழு புறப்பட்டு சென்றது
Published on

திபெத் நாட்டில் உள்ள மானசரோவர் ஏரி கடல் மட்டத்திலிருந்து 4590 மீட்டர் உயரத்தில் கயிலாய மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி ஆகும்.

மானசரோவர் பரிக்ரமம் வரும்போது சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களிலும் கயிலாய மலையின் பிரதிபிம்பத்தை மானசரோவரில் காண முடியும். இது ஓர் அரிய காட்சியாகும். இந்தப் பிரதிபிம்பம் ‘சிவமும் சக்தியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம்’ என்ற கருத்தில் ‘கெளரி சங்கர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குளம் 51 சக்தி பீடங்களில் தேவியின் வலது உள்ளங்கை விழுந்த பீடமாகும்.

மானசரோவர் ஏரியிலிருந்து சத்லஜ் ஆறு, பிரம்மபுத்திரா ஆறு, சிந்து ஆறு போன்ற முக்கிய ஆறுகள் உற்பத்தியாகிறது.

இந்து மதத்தின்படி மானசரோவர் ஏரி பரிசுத்தம் அல்லது தூய்மைக்கு உருவகப்படுத்தப்படுகிறது. இந்த ஏரியின் நீரைப் பருகுபவர் இறப்பிற்குப் பின் சிவபெருமானைச் சென்றடைவர் என்றும், அவர் 100 ஜென்மத்தில் செய்த பாவத்தைப் போக்குவர் என்றும் நம்பப்படுகிறது. கயிலாய மலையைப் போலவே, மானசரோவர் ஏரியும் புனிதத் தலமாக கருதப்படுகிறது. இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து மக்கள் இவ்விடத்திற்கு வருகின்றனர்.

இந்த ஏரியில் நீராடினாலும், இதன் நீரைப் பருகினாலும் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. ஏரியைச் சுற்றிப் பார்க்க இந்தியாவில் இருந்து புனிதப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பயணம் 'கைலாச - மானசரோவர் யாத்திரை' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பயணத்தின் போது யாத்ரீகர்கள் இந்த ஏரியில் புனித நீராடி மகிழ்கின்றனர்.

மானசரோவர் ஏரியானது பல காலங்களுக்கு முன்பாகவே ஆசிய நதிகளான பிரம்மபுத்திரா, காகரா, சிந்து மற்றும் சட்லெஜ் ஆகியவற்றின் மூலமாக யாத்ரீகர்களால் கருதப்பட்டது. எனவே யாத்ரீகர்கள் இவ்விடத்தை மையப்பகுதியாக் கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கே வந்து சென்று கொண்டிருக்கின்றனர். சாம்டோ போருக்குப்பின், இப்பகுதியானது யாத்ரீகர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 1951-லிருந்து 1981-ம் ஆண்டுவரை வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 1980-க்குப் பிறகு மறுபடியும் இந்திய யாத்ரீகர்களின் காலடிச் சுவடுகள் மானசரோவரில் பதியத் தொடங்கின.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து லிபுலே கணவாய் வழியாகவும், சிக்கிமிலிருந்து நாது லா கணவாய் வழியாகவும் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. நாது லா கணவாய் வழியாகச் செல்வதற்கு கடந்த ஆண்டு சீன அரசு தடைவிதித்தது. டோக்லாம் எல்லை பிரச்சினை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

டோக்லாம் பிரச்சினை தீர்ந்துள்ளதால் இந்த ஆண்டில் மீண்டும் நாதுலா கணவாய் வழியாக யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com