சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு
Published on

விருதுநகர்:

சிவகாசி புலிப்பாறை பட்டியில் வைரமுத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு கடந்த 20-ந்தேதி வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றிய பரமேசுவரி (வயது55) என்ற பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் பொன்னுத்தாய் (57), வசந்தா (55), காந்தி (46), முத்து (37), ஆண்டிச்சி (38) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 21-ந்தேதி பொன்னுத்தாய் இறந்தார்.

இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த திருவேங்கடபுரம் வசந்தா நேற்று இரவும், லட் சுமியாபுரம் சாந்தி இன்று அதிகாலையும் பரிதாபமாக இறந்தனர்.

இதனால் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. வெடிவிபத்தில் காயம் அடைந்த முத்து, ஆண்டிச்சி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com