சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். #SivakasiFireworks #FireworksExplosion
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு
Published on

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள காக்கிவாடான்பட்டியில் ராஜூ என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

அப்போது ஏற்பட்ட உராய்வினால் தீப்பொறி ஏற்பட்டது. இது அங்கிருந்த வெடி மருந்துகளில் பரவியது. பயங்கரமாக வெடிக்கத் தொடங்கியது.

அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்ததால் அந்த கட்டிடம் சேதமடைந்தது. பணியில் இருந்த விளாம்பட்டி காமராஜர் காலனியைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது 50), சன்னாசிபட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (35) ஆகிய 2 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதற்கிடையே பட்டாசு விபத்து குறித்து தகவல்அறிந்த சிவகாசி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வெடி விபத்து நடந்த அறையில் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், மம்சாபுரம் பொன்னுச்சாமி ஆகிய 2 பேர் மீட்கப்பட்டனர்.

அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com