ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத்தீ: அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர்.
ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத்தீ: அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்
Published on

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர்.

அமெரிக்காவின் க்லிபோர்னியா மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ பற்றியது. கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு தெற்கு கல்போர்னியாவில் இருந்து லட்சக்கணக்கிலான மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டள்ளனர்.

சுமார் 700க்கு மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் எரிந்து சேதமாகியுள்ளன. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் வடக்கே வென்ச்சுரா கவுன்ட்டி மலையோர பகுதியை ஒட்டியுள்ள 50,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இங்கு பரவி வரும் காட்டு தீயை அணைகக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மேலும், ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வாரமாகியும் காட்டுத் தீ அணைக்கப்படாததால் ப்ல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காட்டு தீ தொடர்ந்து எரிவதால் வீடுகளை விட்டு அப்பகுதி மக்கள் வெளியேறி வருகின்ற்னர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com