

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பெருமாள் மலை பகுதியில் கொல்லப்பாளையத்தார் தோட்டம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 8 மணியளவில் பட்டாசு வெடித்தது. இதில் அந்த வீட்டில் தீப்பிடித்து அருகில் உள்ள மற்ற 2 வீடுகளுக்கும் தீ பரவியது. மேலும் தீப்பிடித்தபோது அதனுடன் பட்டாசும் சேர்ந்து வெடித்ததால் பயங்கர சத்தம் கேட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராடி தீயை அணைத்தனர்.
பின்னர் பார்த்தபோது அண்ணன்-தம்பிகளான குமாரபாளையத்தை சேர்ந்த ராஜா, மற்றொருவர் ரங்கராஜன் என்று தெரியவந்தது. இவர்கள் வீட்டில் இருந்த பட்டாசு வெடித்து தீப்பிடித்துள்ளது.
இந்த பட்டாசுகளை தீபாவளியை முன்னிட்டு வாங்கி வீட்டில் வைத்திருந்தபோது வெடித்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.