ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண் தீயில் கருகி பலி

ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண் தீயில் கருகி பலியானார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண் தீயில் கருகி பலி
Published on

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே  உள்ள தத்தனூரை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகள் மீனா (வயது23). இவர் அருகில் உள்ள மேலூர் கிராமத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்தார். 

இவருக்கு கடந்த 8-ம் தேதி அன்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அன்று அதிகாலையில் எழுந்து அடுப்பு அருகே குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.  அப்போது அசதியில் தன்னையறியாமல் அப்படியே தூங்கி விட்டார். இதனால் அடுப்பு  தீ அவரது சேலையில் பிடித்து எரிந்தது. உடனே  தீயின் வெப்பம் தாங்க முடியாமல் மீனா அலறினார். 

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீனா மீது தண்ணீர் ஊற்றி தீயை  அணைத்தனர். பின்னர் சிகிச் சைக்காக  ஜெயங்கொண்டம் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா நேற்று  இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com