ஹவுரா கோர்ட்டில் தீவிபத்து: கிரிமினல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் நாசம்

மேற்கு வங்காள மாநிலம், ஹவுரா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அங்கிருந்த கிரிமினல் வழக்குகள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் நாசமடைந்தன.
ஹவுரா கோர்ட்டில் தீவிபத்து: கிரிமினல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் நாசம்
Published on

மேற்கு வங்காள மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஹவுரா நகரில் அம்மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்தில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் தலைமை மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் ஏ.சி. இயந்திரங்களில் ஒன்று பயங்கர சப்தத்துடன் திடீரென்று வெடித்து சிதறியது.

இதனால் ஏற்பட்ட தீ மளமளவென்று அறை முழுவதும் பரவியது. இந்த தீயில் அங்கிருந்த கிரிமினல் வழக்குகள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் அனைத்தும் நாசமடைந்தன.

தகவல் அறிந்து சுமார் பத்து வாகனங்களில் விரைந்துவந்த மீட்புப் படையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்தப் பணியில் மீட்புப் படை வீரர் ஒருவர் மயக்கம் அடைந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com