டெல்லி அருகே காசி விஸ்வநாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று தீ விபத்து

வாரணாசி நகரை நோக்கி சென்ற காசி விஸ்வநாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் இன்று பிற்பகல் டெல்லி அருகே தீ விபத்து ஏற்பட்டது. #fire #KashiVishwanathExpress
டெல்லி அருகே காசி விஸ்வநாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று தீ விபத்து
Published on

புதுடெல்லி:

புதுடெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி நகருக்கு செல்லும் காசி விஸ்வநாதர் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் இன்று பிற்பகல் புறப்பட்டு சென்றது.

புதுடெல்லியில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹாப்பூர் நிலையத்தில் பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் அந்த ரெயில் நின்றபோது, அமரும் வசதியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டியில் தீடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதை கவனித்து விட்ட ரெயிலின் ‘கார்டு’ உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தார்.

விரைந்துவந்த தீயணைப்பு படையினர் சில நிமிடங்களில் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தால் அந்த பெட்டியில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான பெட்டியை ஹாப்பூர் நிலையத்தில் கழற்றிவிட்டு, அந்த ரெயில் வாரணாசிக்கு புறப்பட்டு சென்றது.  #tamilnews ##KashiVishwanathExpress

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com