தேனி அருகே தீயில் கருகிய கணவன்-மனைவி

தேனி அருகே சமையல் செய்தபோது தீப்பற்றி கணவன்-மனைவி உடல் கருகினர். 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தேனி அருகே தீயில் கருகிய கணவன்-மனைவி
Published on

தேனி:

தேனி அருகே அல்லிநகரம் பெரியார்நகர் பகுதியை சேர்ந்தவர் பால்கண்ணன் (வயது35). இவரது மனைவி ஆனந்தி(28). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய பால்கண்ணன் வீட்டில் அவரது மனைவி ஆனந்தி சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்டவ் வெடித்து ஆனந்தியின் சேலையில் தீப்பற்றியது. வலியால் துடித்த மனைவியை காப்பாற்ற பால்கண்ணன் முயன்றார். அவர் மீதும் தீப்பற்றியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர்.

படுகாயமடைந்த கணவன்-மனைவி 2 பேரையும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com