தலைநகர் டெல்லியில் 3 அடுக்கு கட்டிடத்தில் தீ விபத்து

டெல்லி காந்தி நகர் பகுதியில் உள்ள 3 அடுக்கு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
தீ விபத்து
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் உள்ள காந்தி நகர் பகுதியில் 3 அடுக்கு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இதில் கடைகளும் அமைந்துள்ளன. 

கொரோனா வைரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் தளர்வு அமலில் உள்ளது. பண்டிகையையொட்டி வர்த்தகம் சூடு பிடித்திருந்தது. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். 

இந்நிலையில், இன்றிரவு அந்த கட்டிடத்தில் உள்ள கடையொன்றில் திடீரென தீப்பிடித்தது.

தகவலறிந்து தீயணைப்பு வாகனங்கள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன.

தீ விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com