சிவகிரி அருகே தீயில் கருகி இளம்பெண் பலி

சிவகிரி அருகே சமையல் செய்த போது எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில் இளம்பெண் உடல் கருகி பலியானார்.
சிவகிரி அருகே தீயில் கருகி இளம்பெண் பலி
Published on

சிவகிரி:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் பொன்மணி. இவரது மனைவி பாண்டி செல்வி (வயது 19). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் தேவிப்பட்டிணம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சம்பத்தன்று சமையல் செய்வதற்காக பாண்டிசெல்வி ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. இதில் உடல் கருகிய அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com