

முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் மெயின் ரோட்டில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை அய்யப்பன் (வயது50) மற்றும் வடுவம்மாள் (60) ஆகியோர் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை போராடி அணைக்க முயன்றனர்.
ஆனால் காற்றின் வேகத்தால் தீ மளமளவென்று பரவியது. இதனையடுத்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். 2 வீடுகளும் தீயில் முற்றிலும் எரிந்ததில் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #tamilnews