மகாராஷ்டிராவில் சரக்கு ரெயிலில் தீ விபத்து - 10 ரெயில்கள் நிறுத்தம்

மகாராஷ்டிர மாநிலத்தில் சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதில், 2 பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. #GoodsTrainFire
மகாராஷ்டிராவில் சரக்கு ரெயிலில் தீ விபத்து - 10  ரெயில்கள் நிறுத்தம்
Published on

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் தகானு அருகே நேற்று இரவு ஒரு சரக்கு ரெயில் வந்துகொண்டிருந்தது. தகானு சாலை, வங்கான் ரெயில் நிலையங்களுக்கு மத்தியில் வந்தபோது, ரெயிலில் திடீரென தீப்பிடித்தது. இதில் 2 பெட்டிகள் கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பாதையில் இரு புறங்களிலும் செல்லக்கூடிய ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று நள்ளிரவு 2 மணியளவில் தீயை கட்டுப்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com