டெல்லியில் பிரதமர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து

டெல்லியில் பிரதமர் அலுவலக வளாகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
டெல்லியில் பிரதமர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து
Published on

புதுடெல்லி:

டெல்லியில் சவுத் பிளாக்கில் பிரதமரின் அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு அறையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது.

உடனடியாக 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 20 நிமிடத்தில் தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் வந்தது.

பிரதமர் அலுவலகத்தின் 2-வது மாடியில் உள்ள 242-ம் எண் அறையில்தான் தீவிபத்து ஏற்பட்டது.

தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்கட்ட ஆய்வின்படி பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com