

மும்பை:
மும்பை மாநிலத்தில் உள்ள மஷாகன் என்ற பகுதியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடற்படை பயன்பாட்டிற்காக போர் கப்பல்கள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான “விசாகப்பட்டினம்” என்ற போர்கப்பலில் எதிர்பாராத விதமாக இன்று தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீ கப்பலின் இரண்டு மற்றும் மூன்றாவது தளங்களுக்கு பரவியது.
இதனை தொடர்ந்து மீட்பு மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இந்த விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அணுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.