டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பகுதியில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தில் இன்று மாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. #DelhiAIIMSFire #DelhiAIIMS #AIIMSoperationtheatre
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து
Published on

புதுடெல்லி:

புதுடெல்லியில் உள்ள அன்சாரி நகர் பகுதியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி கல்லூரி மற்றும் நாட்டின் மிகவும் பிரசித்திபெற்ற ‘எய்ம்ஸ்’ பல்நோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையில் தரைத்தளத்தில் அவசர சிகிச்சை பகுதியில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டெரியும் தீ காற்றின் வேகத்தில் அருகாமையில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியது.

தகவலறிந்து நான்கு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீவிபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதால் பீதியும் பதற்றமும் நிலவுகிறது.

இந்த விபத்துக்கான காரணம் மற்றும் சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #DelhiAIIMSFire #DelhiAIIMS #AIIMSoperationtheatre

X

Maalai Malar
www.maalaimalar.com