பிரதமர் மோடியை கிண்டல் செய்து டுவிட்டரில் மீம்: காமெடி குழுவினர் மீது வழக்கு

பிரதமர் நரேந்திர மோடியை கலாய்த்து டுவிட்டரில் மீம் போட்ட, காமெடி குழுவினர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடியை கிண்டல் செய்து டுவிட்டரில் மீம்: காமெடி குழுவினர் மீது வழக்கு
Published on

டுவிட்டரில் கணக்கு வைத்துள்ள ‘ஆர் இந்தியா பக்சோட் (ஏஐபி)’ என்ற காமெடி குழு நகைச்சுவைக்காக பிரபலங்களின் புகைப்படங்களை மாற்றி பதிவு செய்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் ஸ்னாட்சாட் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நாயுடன் முகத்துடன் இணைத்து மீம் உருவாக்கி பதிவு செய்துள்ளது.

இது வைரலாகப் பரவ, சிலர் மும்பை போலீசுக்கு தகவல் அளித்தனர். அருவருப்பான இந்த சேட்டையில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இவ்வாறு தொடர்ந்து அதிருப்தி கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, தனது மீமை ஏஐபி நீக்கிவிட்டது.

எனினும், ஏஐபி மீது மும்பை காவல்துறையின் சைபர் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com