சொந்த கட்சியிலிருந்து விலகிய கன்னட நடிகர் உபேந்திரா மீண்டும் புதிய கட்சி தொடக்கம்

கன்னட நடிகரான உபேந்திரா சொந்த கட்சியிலிருந்து விலகிய பிறகு மீண்டும் புதிய கட்சி தொடங்கி உள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.
சொந்த கட்சியிலிருந்து விலகிய கன்னட நடிகர் உபேந்திரா மீண்டும் புதிய கட்சி தொடக்கம்
Published on

பெங்களூரு:

கன்னட நடிகர் உபேந்திரா 'கர்நாடகா பிரஜ்னாவந்த ஜனதா பாக்‌ஷா' என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் சில பிரச்சனை காரணமாக கட்சியிலிருந்து சமீபத்தில் விலகினார்.

இந்நிலையில், புதிய கட்சி தொடங்கி உள்ளதாக உபேந்திரா இன்று தெரிவித்துள்ளார். 'பிரஜகிரியா' என பெயரிடப்பட்ட இந்த கட்சியை அதிகாரப்பூர்வமாக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த உபேந்திரா, 'நானும், என் தொண்டர்களும் புதிய கட்சியை தொடங்கி உள்ளோம். மே மாதம் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்பட்ட பிரச்சனையில் நாங்கள் பழைய கட்சியிலிருந்து வெளியேறி விட்டோம். நான் வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன். கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடிவில்லை என்றால் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஆனால் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம்' என கூறினார்.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com