உலகக்கோப்பை கால்பந்து - 40 ஆண்டுகளுக்கு பின் வெற்றி பெற்ற துனிசியா

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் பனாமா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியா அணி வீழ்த்தியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #PANTUN
உலகக்கோப்பை கால்பந்து - 40 ஆண்டுகளுக்கு பின் வெற்றி பெற்ற துனிசியா
Published on

மாஸ்கோ:

32 நாடுகள் கலந்துகொண்டுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. ‘எச்’ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் பனாமா, துனிசியா அணிகள் பலப்பரீட்சை செய்தன. இரு அணிகளும் முதல் இரண்டு லீக் போட்டிகளில் தோல்வியடைந்து ஏற்கனவே தொடரைவிட்டு வெளியேறிவிட்டன.

இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் துனிசியா அணியின் யாசின் மெரையா, தவறுதலாக எதிர் அணிக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார். இதனால் பனாமா அணி 1-0 என முன்னிலை பெற்றது.  

அதன்பின் துனிசியா அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் பனாமா அணிக்கு சாதகமாக அமைந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் துனிசியா வீரர் பென் யூசப் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 

அதன்பின் 66-வது நிமிடத்தில் துனிசியா வீரர் வஹ்பி காஸ்ரி கோல் அடித்தார். இதனால் துனிசியா அணி 2-1 என முன்னிலை பெற்றது.

அதன்பின் இறுதிவரை இரு அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் துனிசியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய துனிசியா அணி துனிசியா அணி, எச் பிரிவு புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. #FIFAWorldCup2018 #FIFA2018 #PANTUN

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com