

வேலூர்:
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முனியன் மனைவி துர்கா (40) திருட்டு வழக்கில் கைதான இவர் கடந்த மாதம் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கர்ப்பப்பை கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த ஜெயில் டாக்டர் உடனே ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பரிந்துரை செய்தார். இதையடுத்து துர்கா இன்று அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டையை சேர்ந்தவர் குமார் (50) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் ஜெயிலில் உள்ளார்.
இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கடந்த சில மாதங்களாக வேலூர் ஜெயில் கைதிகள் அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஜெயிலில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி கைதிகளின் உடல் நலனை பரிசோதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.