அய்யம்பேட்டை அருகே 3 வயது குழந்தையுடன் பெண் மாயம்

அய்யம்பேட்டை அருகே 3 வயது குழந்தையுடன் பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே ரெயிலடி கான் காசிம் நகரை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவரது மனைவி அருள் ப்ரியா (வயது 26). இவரது மகள் தீப்தி (வயது 3). சம்பவத்தன்று அருள் ப்ரியா கடலூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று வருவதாக கூறி குழந்தை தீப்தியுடன் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அருள் பிரியாவும் குழந்தையும் கடலூர் சென்றடைய வில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து பாலச்சந்தர் தனது மனைவியையும் குழந்தையையும் பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் அருண்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான பெண்ணையும், குழந்தையையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com