பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு முட்புதரில் வீச்சு

பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை முட்புதரில் வீசிய தாய் யாரென்று தெரியவில்லை.
மீட்கப்பட்ட பெண் குழந்தை.
மீட்கப்பட்ட பெண் குழந்தை.
Published on

திருப்பூர்:

திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சிவன் தியேட்டர் பகுதியில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகின்றன. இன்று காலை அந்த வழியாக சிலர் நடந்து செல்லும் போது குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து முட்புதருக்குள் சென்று பார்த்த போது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை முட்புதரில் வீசிய தாய் யாரென்று தெரியவில்லை.

தகாத உறவில் பிறந்ததன் காரணமாக  குழந்தையை முட்புதரில்  வீசினாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசி சென்றாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி தாயை தேடி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com