பெண் என்ஜினீயரிடம் அத்துமீறிய தனியார் நிறுவன உரிமையாளர் கைது

செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பி தொல்லை கொடுத்து பெண் என்ஜினீயரிடம் அத்துமீறிய தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பெண் என்ஜினீயரிடம் அத்துமீறிய தனியார் நிறுவன உரிமையாளர் கைது
Published on

கோவை:

கரூரை சேர்ந்த இளம்பெண் என்ஜினீயர் ஒருவர் வேலைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார்.

தனது தாயுடன் சரவணம்பட்டி பகுதியில் வீடு எடுத்து தங்கிய அவர் கடந்த வாரம் அத்திப் பாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

இந்நிலையில் நிறுவன உரிமையாளரான மோசஸ் (37) என்பவர் பெண் என்ஜினீயரின் செல்போனுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ஆபாச மெசேஜ் மற்றும் வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்தார். இதை அவர் கண்டித்தார். அதை மோசஸ் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பெண் என்ஜினீயருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

நேற்று அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் என்ஜினீயரிடம் மோசஸ் தகாத வார்த்தைகள் பேசியதோடு, அவரது கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றார்.

அதிர்ச்சியடைந்த பெண் சத்தம் போடவே மோசஸ் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என மிரட்டி விட்டு தப்பி ஓடினார்.

இதுகுறித்து இளம்பெண் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் மோசஸ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com