ராஜபாளையத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம்

ராஜபாளையத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்கப்பட்டது. கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் பிணம்
பெண் பிணம்
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியார் நூற்பாலைக்கு சொந்தமான வாகன காப்பகத்தின் பின்புறம் ஊழியர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியை சுற்றி தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியாளர்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, அதிகமான துர்நாற்றம் வீசி உள்ளது.

இதையடுத்து நாற்றம் வந்த இடத்திற்கு அருகே சென்று பார்த்த போது, இறந்த நிலையில் பெண் சடலம் கிடப்பது தெரிய வந்தது. ஆலை நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் அழுகிய நிலையில் கிடப்பது தெரிய வந்தது.

அந்த பெண் நீல நிற சட்டையும், நீல நிறத்தில் பூ போட்ட சேலையும் அணிந்து இருந்தார். அவருடைய முகம் சிதைந்து உடல் வீங்கிய நிலையில் இருந்தது. அந்த பெண் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பிணத்தின் அருகே கிடந்த பையில் பணம், குருணை மருந்து ஆகியவை இருந்தது.

இறந்த பெண் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்தார்களா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com