உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: லீக் போட்டியில் பெடரர், கோஃபின் வெற்றி

லண்டனில் நடைபெற்றுவரும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டிகளில் பெடரர், கோஃபின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: லீக் போட்டியில் பெடரர், கோஃபின் வெற்றி
Published on

லண்டன்:

பெடரர், நடால் உள்பட டாப்-8 வீரர்கள் பங்கேற்கும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் 12-ம் தேதி தொடங்கியது. இத்தொடரில் கலந்துகொள்ளும் எட்டு வீரர்களும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடத்தப்படும். லீக் போட்டிகளில் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவர்.

ஐந்தாவது லீக் போட்டியில் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர், மூன்றாம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வரேவை எதிர்கொண்டார். இப்போட்டியில், 7-6, 5-7, 6-1 என்ற செட்கணக்கில் பெடரர் வெற்றி பெற்றார்.

முன்னதாக நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் பெல்ஜியத்தின் டேவிட்  கோஃபினை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் நடாலுக்கு காலில் அடிப்பட்டது. இருப்பினும் நடால் போட்டியை  தொடர்ந்து விளையாடினார். இறுதியில் 7-6, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் கோஃபின் வெற்றி பெற்றார். 

டேவிட்  கோஃபின்

இதையடுத்து ரபேல் நடால் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக மற்றொரு ஸ்பெயின் வீரரான பப்லோ கரினீ பஸ்டா சேர்க்கப்பட்டுள்ளார்.

பப்லோ கரினீ பஸ்டா

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com