ஐ.எஸ்.எல். கால்பந்து: லீக் போட்டிகளில் கொல்கத்தா, புனே அணிகள் வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டிகளில் அட்லெடிகோ டீ கொல்கத்தா, எப்.சி. புனே சிட்டி அணிகள் வெற்றி பெற்றன.
ஐ.எஸ்.எல். கால்பந்து: லீக் போட்டிகளில் கொல்கத்தா, புனே அணிகள் வெற்றி
Published on

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. மாலை 5:30 மணிக்கு தொடங்கிய 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி கோவா - எப்.சி. புனே சிட்டி அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 72-வது நிமிடம் புனே அணியின் எமிலியானோ அல்ஃபரோ கோல் அடித்தார். அதன்பின் 84-வது நிமிடம் ஜோனதன் லூக்கா புனே அணிக்காக இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் மேற்கொண்டு கோல் அடிக்காததால் 2-0 என்ற கோல் கணக்கில் புனே சிட்டி அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் புனே அணி புள்ளிபட்டியலில், 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com