மதுரையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தை

மனைவி பிரிந்து சென்றதால் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விஷம்
விஷம்
Published on

மதுரை:

மதுரை செல்லூர் களத்துப்பொட்டல் பர்மா காலனியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக முனீஸ்வரன் சரியாக வேலைக்குச் செல்லவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட விரக்தியடைந்த லதா தனது மூத்த மகனை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். முனீஸ்வரன் பலமுறை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் லதா மறுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று லதாவிடம் போனில் பேசிய முனீஸ்வரன், 2-வது மகனுக்கு வி‌ஷத்தை கொடுத்துவிட்டு தானும் வி‌ஷம் குடித்து விட்டதாக கூறி அழைப்பை துண்டித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லதா பதறியடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். அங்கு கணவர்-மகன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இருவரும் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக லதா கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com