புளியங்குடி அருகே தந்தை கண்டித்ததால் பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை

புளியங்குடி அருகே செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கேந்திராஜா. இவருடைய மகன் ராமர் (வயது 17). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கேந்திராஜா மகனின் ஆன்லைன் வகுப்பிற்காக புதிதாக செல்போன் வாங்கிக்கொடுத்துள்ளார்.

ஆனால் ராமர் எந்த நேரமும் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை கேந்திராஜா கண்டித்துள்ளார். இதனால் ராமர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் எலுமிச்சைக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை ராமர் குடித்து மயங்கினார். இதை பார்த்த உறவினர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ராமர் பரிதாபமாக உயிர் இழந்தார். 

இதுகுறித்து புளியங்குடி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் யோபுசம்பத் ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com