திருக்கனூர் அருகே மதுபழக்கத்தை தந்தை கண்டிப்பு- வாலிபர் தற்கொலை

திருக்கனூர் அருகே மதுபழக்கத்தை தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரவணன் (வயது 24). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடித்து வந்தார். அவ்வப்போது மதுகுடிக்க பெற்றோரிடம் பணம் கேட்டு சரவணன் தொந்தரவு செய்து வந்தார். பெற்றோர் இதனை பல முறை கண்டித்தும் சரவணன் மது பழக்கத்தை கைவிடவில்லை. 

அதுபோல் நேற்றும் சரவணன் மது குடிக்க பெற்றோரிடம் பணம் கேட்டார். இதனை கண்டித்த அவரது தந்தை சுப்பிரமணி சரவணனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரவணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தாயின் சேலையால் சரவணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com