தந்தை கண்டித்ததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

மீன்பிடிக்க சென்றதை தந்தை கண்டித்ததால் மனவேதனை அடைந்த 6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கோமங்கலத்தை சேர்ந்தவர் ஞானசிவகுமார். விவசாயி. இவரது மகன் சக்தி(வயது 11). இவர் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் விடுமுறை நாட்களில் அந்த பகுதியில் குளத்தில் சென்று மீன் பிடித்துள்ளார். இதனை சிறுவனின் தந்தை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த சக்தி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மகன் வீட்டில் பிணமாக தொங்குவதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மேட்டுப்பாளையம் கணுவாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வினோத்(19). இவரும், அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வினோத்தின் காதலி அவரிடம் சரிவர பேசவில்லை. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்தில் உள்ள அரசமரத்தடியில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதபாமாக உயிரிழந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com